12 இயர்ஸ் எ சிலேவ்
12 இயர்ஸ் எ சிலேவ் 12 Years a Slave | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஸ்டீவ் மெக்குயின் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | சாலமன் நார்துப் எழுதிய டுவெல்வ் இயர்ஸ் எ சிலேவ் |
திரைக்கதை | சான் ரிட்லி |
இசை | ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சான் பாப்பிட் |
படத்தொகுப்பு | ஜோ வால்கர் |
விநியோகம் | பாக்ஸ் சியர்ச்லயிட் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 30, 2013(டெல்லுரைடு திரைத் திருவிழா) நவம்பர் 8, 2013 (அமெரிக்க ஐக்கிய நாடு) சனவரி 10, 2014 (ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 134 நிமிடங்கள்[1] |
நாடு |
|
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $22 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $187.7 million[3] |
12 இயர்ஸ் எ சிலேவ்(ஆங்கிலம்:12 Years a Slave) 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாற்று நாடகத் திரைப்படமாகும். சாலமன் நார்துப் எழுதிய டுவெல்வ் இயர்ஸ் எ சிலேவ் உண்மைக் கதையினைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நியூ யார்க் நகரத்தில் பிறந்த விடுதலைபெற்ற ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவர் வாசிங்டன் டிசியில் 1841 ஆம் ஆண்டில் கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்டு லூசியானாவில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலைப்பெற்றார்.[4]
ஸ்டீவ் மெக்குயின் இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும். சான் ரிட்லி திரைக்கதையினை எழுதியுள்ளார். சிவெடெல் எஜியோபார் சாலமன் நார்துப் ஆக நடித்துள்ளார். மைக்கல் பாஸ்பெந்தர், பெனடிக்ட் கம்பர்பேட்ச், பவுல் டானொ, பவுல் ஜியமாட்டி, லுபிடா நியாங்கோ, சாரா பால்சன், பிராட் பிட், ஆல்பிரி வுட்வர்டு ஆகியோர் நடித்துள்ளனர்.
12 இயர்ஸ் எ சிலேவ் வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றது. பலராலும் 2013 ஆம் ஆண்டின் சிறந்தத் திரைப்படமென விவரிக்கப்பட்டது. $20 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் ஹாலிவுட்டில் சிறப்பாக ஓடி $187 மில்லியன் வருவாயினை ஈட்டியது. மூன்று அகாதமி விருதுகளைப் பெற்றது: சிறந்தத் திரைப்படம், நயாங்கோவிற்கு சிறந்தத் துணை நடிகை, மற்றும் ரிட்லியிற்கு சிறந்தத் தழுவியத் திரைக்கதை ஆசுக்கர்.[5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "12 YEARS A SLAVE (15)". பாக்ஸ் சியர்ச்லயிட் பிக்சர்ஸ். British Board of Film Classification. பெப்பிரவரி 19, 2014. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2014.
- ↑ "2013 Feature Film Production Report" (PDF). Film L.A. 6 மார்ச்சு 2014. Archived from the original (PDF) on 2018-07-12. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2014.
- ↑ "12 Years a Slave (2013)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2014.
- ↑ எஆசு:10.1353/cwh.1969.0065
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ "Sign of the times". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 12, 2014.
- ↑ Lacob, Jace (மார்ச்சு 2, 2014). "'12 Years A Slave' Wins Best Picture Oscar At 86th Annual Academy Awards". Buzzfeed. http://www.buzzfeed.com/jacelacob/12-years-a-slave-wins-best-picture-and-makes-oscars-history. பார்த்த நாள்: மார்ச்சு 13, 2014.
- ↑ "Baftas: Gravity and 12 Years a Slave share glory". BBC News. February 17, 2014. http://www.bbc.co.uk/news/entertainment-arts-26221196. பார்த்த நாள்: 17 February 2014.